ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லாPTI

ஜம்மு - காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
Published on

ஜம்மு - காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாதிகளின் இத்தகைய செயலுக்கு கூட்டாக கண்டனம் தெரிவிப்பதுடன், நீதி மற்றும் அமைதியை உறுதிசெய்யும் பாதையில் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் உள்பட ஆயுதப் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதேபோன்று இந்தத் தாக்குதல் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | பெஹல்காம் தாக்குதல்: மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com