
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அரசுமுறை பயணமாக செளதி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று காலை தில்லி திரும்பினார்.
இந்த நிலையில், பெஹல்காம் சம்பவம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கெனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.