மகாராஷ்டிரம்: திருமண நிகழ்வில் மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி

மகாராஷ்டிரத்தில் திருமண நிகழ்வின்போது மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரியால் பரபரப்பு நிலவியது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் திருமண நிகழ்வின்போது மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரியால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், சோப்டா வட்டத்தில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியில் திரிப்தி-அவினாஷ் தம்பதியும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி கிரண் மாங்கிள்(50) தனது மகள் திரிப்தியைக் சுட்டுக்கொன்றார்.

மேலும் இந்த சம்பவத்தில் அவரது கணவர் அவினாஷும் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து ஜல்கானின் போலீஸ் அதிகாரி கூறுகையில், "தம்பதியர் அங்கு இருப்பதை அறிந்ததும் கிரண் திருமண மண்டபத்திற்கு வந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, அருகிலுள்ள மக்கள் கிரணை கீழே தள்ளி அவரைத் தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின்: கி. வீரமணி

கிரண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரணின் செயலுக்கு என்ன காரணம் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். திரிப்தி-அவினாஷ் தம்பதிக்கு ஒரு ஆண்டு முன்பு திருமணம் நடந்த நிலையில் அவர்கள் புணேவில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com