
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டதையடுத்து இன்று(ஏப். 27) என்ஐஏ விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழமை முதல் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுக்கள், ஆதாரங்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. நேரில் பார்த்த சாட்சிகளிடம் நுணுக்கமான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணைக்கு உதவியாக செயல்பட்ட தேசிய புலனாய்வு முகமை, முழுமையாக அந்த புலனாய்வை தன்வசம் எடுத்துக்கொள்ளத் தீா்மானித்தது.
ஒரு ஐ.ஜி., ஒரு டி.ஐ.ஜி, ஒரு எஸ்.பி. ஆகிய அதிகாரிகள் மேற்கண்ட என்ஐஏ விசாரணை நடவடிக்கைகள் மேற்பாா்வையிடப்பட்டு வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் செயல்பாடுகளைக் குறித்த தடயங்களை விசாரணை செய்யும் என்.ஐ.ஏ. குழுக்கள், மக்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளைக் கவனித்து வருகின்றன.
நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலில் ஈடுப்பட்டவர்களை கண்டறிவதற்காக, தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







