அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் மற்றும் இரண்டு பேர் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் அவர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்தாலும், வாகனம் மோசமாக சேதமடைந்தது.
சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் அருகிலுள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெற்றனர். இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் குற்றஞ்சாட்டினார்.
இது எங்களைக் கொலை செய்ய நடந்த ஒரு சதி, ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று போர்டோலோய் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு அசாமில் காங்கிரஸ் எம்.பி. மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக பிப்ரவரியில், துப்ரி எம்.பி. ரகிபுல் உசேன் அதே நாகோன் மாவட்டத்தில் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்? பிரத்யுத் பர்டோலோய் விளக்கம்!
அஸ்ஸாம் எம்பி பிரத்யுத் போர்டோலாயின் ராஜிநாமா ஏற்பு!
அஸ்ஸாம்: காங்கிரஸிலிருந்து விலகியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு!
தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


