
தெலங்கானாவின் கேட்டிபள்ளி கிராமத்தில் உள்ள பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் சந்தீப், நரேஷ் மற்றும் தேவி சரண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் மோட்டகொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மோட்டகொண்டூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் கூறுகையில்,
வெடிப்புக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது. நிறுவனத்திற்கு வெளியே இறந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, இழப்பீடு கோரி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.