மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

ராஜஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

(File Photo | PTI)

Published On :

ராஜஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் பிவாடி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 7 பேர் உயிருடன் எரிந்து பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.

வழக்கமான ரோந்துப் பணியின் போது இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தெரியவந்ததாகவும், அதைத் தொடர்ந்து உடனடியாக மீட்புப் பணி தொடங்கப்பட்டதாகவும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமிதா மிஸ்ரா தெரிவித்தார். 9 பேர் உள்ளே சிக்கியுள்ளனர். இதுவரை ஏழு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள இரண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான தீவிர முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். பிவாடியின் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Seven workers were burnt alive when a fire broke out in a chemical factory in Rajasthan's Bhiwadi town on Monday, officials said. Two workers remain trapped inside the unit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.