ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை...
Election commission dismisses Rahul Gandhis voter theft allegations
ராகுல் காந்திANI
Updated on
1 min read

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இது தேசத் துரோகம் என்றும் பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு பதில் அளிக்கும் வகையில்,

"நாள்தோறும் கூறப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, அச்சுறுத்தல்களை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பாரபட்சமின்றியும் வெளிப்படையாகவும் பணியாற்றுகின்றனர். எனவே இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Summary

Election commission dismisses Rahul Gandhis voter theft allegations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com