தற்கொலை
தற்கொலைகோப்புப்படம்

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவி காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் விரக்தியில் தற்கொலை!
Published on

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் சூரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அல்பேஷ்பாய் காண்ட்டிபாய் சோலங்கி(41). அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

அவருடைய மனைவி பால்குனி பாய் பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிவுரு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 7 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், சம்பவ நாளன்று தன் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த பால்குனி பாய், அல்பேஷ்பாய்க்கு போனில் தொடர்புகொண்டு கதவைத் திறக்கச் சொல்ல முற்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து அழைத்தும் அவரது கணவர் அல்பேஷ்பாய் போன் அழைப்பை எடுத்து பேசவில்லை. இதனால் பயந்துபோன பால்குனி பாய் உடனடியாக தனது உறவினர்களுக்கு போனில் அழைத்து தகவல் சொல்லியுள்ளார்.

அவர்கள் உடனடியாக வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கே கணவரும் இரு குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளனர். அதன்பின், போலீஸார் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் அவர்கள் அருகே தற்கொலைக் குறிப்பெழுதப்பட்ட காகிதங்களும் கிடைத்துள்ளன. அதில், தற்கொலை தான் செய்துகொள்வதை உறுதிப்படுத்தியிருக்கிறார் அல்பேஷ்பாய்.

இதனைத்தொடர்ந்து, அல்பேஷ்பாயின் சகோதரர் தனது அண்ணன் மரணத்துக்கு நீதி கேட்டு அண்ணனின் மனைவி மீது குற்றஞ்சாட்டி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், அவரது அண்ணன் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பிருந்ததாகவும், அந்த நபர் பால்குனி பாயின் காதலன் என்றும், இதனையறிந்தபின், மிகுந்த மன வருத்தத்தில் இருந்த தனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

போலீஸார் அல்பேஷ்பாயின் மனைவியிடமும் அவருடன் தொடர்பிலிருப்பதாகக் கூறப்படும் நபரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[மன ரீதியாக பாதிக்கப்படுவோரின், மன திடத்தை அதிகரித்தால், அவா்கள் தற்கொலை எண்ணத்தை கைவிடுவா். குறிப்பாக, வீட்டில் இருப்பவா்களிடமோ, நண்பா்களிடமோ மனம் விட்டு பேசும்போது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும்.

அதன்படியே, 104 மருத்துவ சேவையில், பிரத்யேக மையம் தொடங்கப்பட உள்ளது. தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்.

மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.]

Summary

Suspecting his wife of having an affair, a man his two children died by suicide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com