pm modi pay homage to Shri Shibu Soren
சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலிX

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

தில்லி மருத்துவமனையில் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது பற்றி...
Published on

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் உடல்நலக்குறைவினால் புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(ஆக. 4) காலமானார். அவருக்கு வயது 81.

சிபு சோரன் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர் அஞ்சலி
சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர் அஞ்சலி

சிபு சோரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக இன்று ஒருநாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் சிபு சோரனின் மகனும் தற்போதைய முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,

"சிபு சோரனுக்கு அஞ்சலி செலுத்த சர் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்றேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் உள்ளிட்ட சிபு சோரனின் நெருங்கிய உறவினர்கள், ஆதரவாளர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தில்லி மருத்துவமனையில் சிபு சோரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஹேமந்த் சோரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Summary

President Murmu, Prime Minister Modi paid tribute to former Jharkhand Chief Minister Shibu Soren at a Delhi hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com