
டிரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்கா கெடு விதித்திருந்த நிலையில், கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.
முன்னதாக, இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியால், இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதமானது 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இனி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கு அங்கு 50 சதவிகித வரி வசூலிக்கப்படவுள்ளது.
அதிபர் டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பால் இந்திய வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையை உருவாகியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி வரி விதிப்புக்கு மத்திய வெளியுறவுத்துறையும் நியாமற்றது எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “டிரம்பின் 50 சதவிகித வரி விதிப்பு என்பது பொருளாதார ரீதியிலான மிரட்டல். இது இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி.
மோடியின் பலவீனம், இந்தியர்களின் நலன்களை மேலோங்கி சென்று விடக்கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.