
சத்தீஸ்கரில் நீண்ட நேர துப்பாக்கிச் சூடு தாக்குதல்களுக்கு பின், ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு நக்சல் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் புதியதாக உருவாக்கப்பட்ட மொஹ்லா - மன்பூர் - அம்பாகார் - சௌக்கி மாவட்டத்தின், குர்சேகலா வனப் பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக.7) சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ரிசர்வ் காவல் படை, இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுடன் நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தத் தாக்குதல்களுக்கு பின்னர், அப்பகுதி மாவோயிஸ்டுகளின் தளபதியாகச் செயல்பட்ட ஸ்ரீகாந்த் புனேம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, அவரைப் பிடிக்க ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து அரசு அதிகாரிகள் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, அதன் தோட்டாக்கள், ஒரு செல்போன் மற்றும் ரூ.11,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.