
உத்தரகண்ட் மாநிலத்தில், மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
உத்தரகாசி மாவட்டத்தில், கடந்த ஆக.5 ஆம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்த உருவான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் தராலி மற்றும் சுக்கி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களை மீட்கும் பணிகள் 3-வது நாளான இன்றும் (ஆக.7) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ராணுவம், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வரை 274 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மலைப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சினூக் எனும் கனரக ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஹர்ஷில் பகுதியில் இருந்து சினூக் ஹெலிகாப்டரின் மூலம் மீட்கப்பட்ட மக்கள் அனைவரும், ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.
இதுவரை, இந்தப் பேரிடரினால் 3 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 50 பேர் மாயமானதால், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.