
உத்தரகண்டில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட உத்தரகாசி மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் “ஆபரேஷன் தாராலி” மீட்பு நடவடிக்கைகளின் மூலம் தற்போது வரை 816 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாசியில் மேகவெடிப்பைத் தொடர்ந்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், ஹர்சில் மற்றும் தாராலி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க “ஆபரேஷன் தாராலி” எனும் பெயரில், இந்திய ராணுவம், இந்தியா - திபெத்திய எல்லைக் காவல், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தற்போது வரை 816 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஹர்சில் பகுதியில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை அறிய தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்துடன், சேதமடைந்த கட்டுமானங்களுக்கு பதிலாக, லிம்சிகாட் பகுதி வரை 90 அடி நீள பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், 2 எம்.ஐ. ரக ஹெலிகாப்டார்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் வழங்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.