ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.
Published on

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: வாக்குத் திருட்டு என்பது ‘ஒரு மனிதா், ஒரு வாக்கு’ என்ற மக்களாட்சியின் அடிப்படை கொள்கை மீதான தாக்குதலாகும். நோ்மையான தோ்தலுக்கு குறைபாடில்லாத வாக்காளா் பட்டியல் அவசியம்.

எண்ம வாக்காளா் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அதன்மூலம் அந்தப் பட்டியலை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் தணிக்கை செய்ய முடியும். இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்.

இதற்கு votechori.in/ecdemand வலைதளத்தில் பதிவு செய்வதன் மூலம், பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரினாா்.

X
Dinamani
www.dinamani.com