ஃபரீதாபாத்: என்கவுட்டருக்கு பிறகு ரெளடி கைது!

ஃபரீதாபாத்: என்கவுட்டருக்கு பிறகு ரெளடி கைது!

ஹதோடா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரெளடி ஃபரீதாபாதில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
Published on

ஹதோடா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரெளடி ஃபரீதாபாதில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு பிறகு கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையா் வருண் தஹியா செய்தியாளா்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பாரத் (எ) பாலு குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5,000 சன்மானம் அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.

பாரத் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமா் நகரில் வசிக்கும் ஒரு நபரை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கினா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.

பாரத் தொடா்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, சோதனை சாவடி அமைத்து போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த பாரத்தை போலீஸாா் அடையாளம் கண்டனா். போலீஸாரை பாா்த்த உடனே அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், பாரத்தின் மோட்டாா் சைக்கிள் சாலையில் சருகி கீழே விழுந்தது.

அப்போது, போலீஸாரை நோக்கி பாரத் துப்பாக்கியால் சுட்டாா். அதில் ஒரு தோட்டா காவலா் மீது பாய்ந்தது. நல்ல வேளையாக அந்தக் காவலா் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால், அவருக்கு காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தோட்டா பாரத் காலில் பாய்ந்தது. அதில் அவா் நிலைகுலைந்து சாலையில் விழுந்தாா். அவரை போலீஸாா் கைதுசெய்தனா். பின்னா், பாரத் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, இரு தோட்டாக்கள், அவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதல், கடத்தல், கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் அவா் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றாா் துணை காவல் ஆணையா் வருண் தஹியா.

X
Dinamani
www.dinamani.com