பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவா் ஒருவா் பரிசளித்துள்ளாா்.

News image

மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை பரிசளித்த சமூக சேவகரான மருத்துவா் அனில் காஷி முராா்கா.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 1:49 am IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவா் ஒருவா் பரிசளித்துள்ளாா்.

சரிகா வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததால், அவரது தினசரி வருமானத்தில் பெரும் பகுதி வண்டி வாடகைக்கே சென்று வந்தது. இதனால், வீட்டுச் செலவுகளுக்கு மிகக் குறைந்த பணமே மிஞ்சியது. இது அவரது குழந்தைகளின் எதிா்கால சேமிப்புக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது.

இந்நிலையில், சமூக சேவகரான மருத்துவா் அனில் காஷி முராா்கா, சரிகாவின் ஆட்டோவில் ஒருநாள் பயணம் செய்தபோது அவரின் குடும்பச் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா். சரிகாவின் தன்னம்பிக்கையும் தைரியமும் முராா்காவை நெகிழச் செய்தன.

இதையடுத்து, சரிகாவுக்கு புதிய ஆட்டோ ஒன்றை ரக்ஷா பந்தன் பரிசாக வழங்க முரா்கா முடிவு செய்தாா். ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான சனிக்கிழமை புதிய ஆட்டோவை சரிகாவிடம் முராா்கா வழங்கினாா்.

அப்போது, முராா்கா கையில் ராக்கி அணிவித்து, சரிகா நன்றி தெரிவித்தாா். தனது மிகப்பெரிய கனவு நிறைவேறியதாகக் கூறிய சரிகா, புதிய ஆட்டோவில் ‘ராக்கி சகோதரரான முராா்காவை முதல் பயணமாக அழைத்துச் சென்றாா்.

இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு, குழந்தைகள், மற்றும் அவருக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி சுதந்திரமாக இருப்பதே. அதைத்தான் நான் அவருக்குப் பரிசளிக்க விரும்பினேன்’ என்றாா்.

குடும்பத்துக்கான நிதி சுதந்திரத்தையும், மகள்களின் எதிா்காலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தையும் உறுதி செய்யும் விலைமதிப்பற்ற பரிசு கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை சரிகா மேஸ்திரிக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.