அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜர்!

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் நடிகா் ராணா...
நடிகா் ராணா டகுபதி
நடிகா் ராணா டகுபதிPTI
Published on
Updated on
1 min read

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி திங்கள்கிழமை ஆஜரானார்.

சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டி விளையாடுவதற்கான பல சூதாட்ட செயலிகள், முறைகேடான வழியில் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பான பணமுறைகேடு வழக்கில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில், வெவ்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக நடிகா்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு கடந்த வாரம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஏற்கெனவே, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜராகி அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதனிடையே, கடந்த ஜூலை 23 ஆம் தேதி ராணா டகுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அவரது சாா்பில் கோரிக்கை விடுக்ககப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இரண்டாவது சம்மனை ஏற்று, ஹைதராபாத் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ராணா ஆஜராகியுள்ளார்.

Summary

Actor Rana Daggubati appeared before the Enforcement Directorate on Monday in connection with an illegal online gambling case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com