
புது தில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக புறப்பட்ட நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. ராகுல் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு முன்வைத்திருந்த நிலையில், அதனை தங்களிடம் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
இன்று காலை வழக்கம் போல நாடாளுமன்றம் கூடியி நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், தடுப்புகள் மீது ஏறிச் செல்ல அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, துரை வைகோ, சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பேரணியாகப் புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரியங்கா உள்பட ஏராளமான எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.