
சத்தீஸ்கரில் நக்சல்களுடான பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில், மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் வனப் பகுதியில், இன்று (ஆக.12) காலை மாநிலக் காவல் துறையின் ஒரு பிரிவான, மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளில் ஏராளமான நக்சல்களும் படுகாயமடைந்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் நேற்று (ஆக.11) முதல் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு! எண்ணிக்கை 44 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.