
மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உலக அதிசயங்களுக்கே சவால் விடுவதாக உள்ளது.
ஏதோ திட்டமிடப்படாமல், தெரியாமல் நடந்த தவறுதான் என்று சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், அதெப்படி ஒரு முறைகூட யாருமே ஒரே பக்கத்தில் இப்படி ஒரே பெண், ஆறு முறை ஒரே புகைப்படத்துடன் இருக்கிறாரே என்று பார்த்திருக்க மாட்டார்களா? இது தொழில்நுட்பத் தவறு என்றால், ஒரே வாக்காளர் பட்டியலில் ஒரே பக்கத்தில் இருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடியா ஒதுக்கப்பட்டிருக்கும்?
ஒருவரே ஒரே வாக்குச்சாவடியில் மீண்டும் மீண்டும் வந்து வாக்களித்தால் சிக்கலாகிவிடும் என திட்டமிட்டு வேறு வேறு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அதுவும் தொழில்நுட்பம்தான் இப்படி திட்டமிட்டு கோளாறு செய்திருக்குமோ? என்று சமூக ஊடகங்களில் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த சுஷ்மா குப்தா சம்பவம் நடந்திருப்பது, மகாராஷ்டிரத்தின் பல்காரில் உள்ள வாக்காளர் பட்டியலில்தான். பச்சை நிற புடவையுடன் சுஷ்மா குப்தா என்ற பெண் வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களுடன் (EPIC) 6 முறை இடம்பெற்றுள்ளார்.
அதாவது, நாளாசோபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், வாக்காளர் பெயர் சுஷ்மா குப்தா, உறவினர் பெயர் சஞ்சய், வயது 39 என அனைத்துத் தகவல்களும் ஒன்றுபோல பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒவ்வொரு வாக்காளர் எண்ணையும் பதிவு செய்து பார்த்தால் ஒரு வாக்காளர் எண்ணுக்கு புனித அந்தோணியர் பள்ளி என்றும், மற்றொரு வாக்காளர் அட்டைக்கு புனித மேரி உயர்நிலைப் பள்ளி என ஒவ்வொரு வாக்காளர் அட்டைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது அதிசயமே அசந்துபோகும் அதிசயம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.