
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் மாயமான 66 பேரை, தேடும் பணிகளில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாசியில் கடந்த ஆக.5 ஆம் தேதி, மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் தாராலி பகுதியில் இருந்த ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமாகின. இதனால், தற்போது வரை 22 நேபாள தொழிலாளிகள் உள்பட 66 பேர் மாயமானதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களின் நிலைக் குறித்து தற்போது வரை தெரியவராத நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள், நேற்று (ஆக.11) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சேதனைகளை மேற்கொண்டனர். இருப்பினும், அங்கு பெய்து வரும் தொடர் மழையால், தாராலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, புவியியல் நிபுணர்கள் நிலத்தை ஊடுருவும் அதிநவின ரேடார் கருவிகளின் உதவியுடன், இடிபாடுகளினுள் சிக்கியுள்ள மனிதர்களைத் தேடும் பணிகளை இன்று (ஆக.12) தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து தற்போது வரை, 1300 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.