மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

சட்டத்தை மீறி வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் சேர்க்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டு....

சோனியா காந்தி - ANI

Published On :

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சம்பந்தமான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், குடியுரிமை பெறுவதற்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சட்டத்துக்கு புறம்பாக இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு அவர் இத்தாலி குடிமகளாக இருந்தபோது, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது.

அந்த சமயத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இல்லமான 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தனர். அந்த முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி பெயர்கள் இருந்தன. 1980 ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட போது, வாக்குச் சாவடி 145, எண் 388 இல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை உள்ள ஒருவரே வாக்காளராக இருக்க முடியும், இது சட்ட மீறலாகும். 1982 ஆம் ஆண்டு இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அவரது பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் 1983 இல் சேர்க்கப்பட்டது.

அப்போதும் பிரச்னை எழுந்தது. சோனியா காந்திக்கு ஏப்ரல் 30, 1983 ஆம் தேதிதான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், ஜனவரி 1, 1983 தேதியின்படி, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140, எண் 236 இல் இடம்பெற்றிருந்தது.

குடியுரிமை பெறுவதற்கு முன்னதாகவே, இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னர், இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஆனது ஏன்? என்றுகூட நாங்கள் கேட்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமித் மால்வியா வெளியிட்ட படம்.

அமித் மால்வியா வெளியிட்ட படம்.

Summary

The BJP has questioned the inclusion of senior Congress leader Sonia Gandhi's name in the voter list three years before she obtained Indian citizenship.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.