ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் மலைக் கிராமத்தில் இன்று (ஆக.14) மதியம் 12 மணியளவில் மிகப் பெரியளவிலான மேகவெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் திரண்டிருந்த 250-க்கும் மேற்பட்ட பக்தர்களில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் உள்பட 46 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 167-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதில், 38 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், செஞ்சிலுவை இயக்கம் உள்ளிட்ட ஏராளமான மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய சுமார் 20 நாள்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll due to flash floods caused by cloudbursts in Jammu and Kashmir's Kishtwar district has risen to 23, it has been reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்: 3,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

ஜம்மு - காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; நால்வா் காயம்

அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

அழகான (அமைதியான) காஷ்மீர்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



