
கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஒருவர் மட்டுமே குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள், அவரது 64 வயது மனைவி பல்லவி மீது குற்றம்சாட்டி வழக்கு விசாரணையை முடித்து விட்டனர்.
இந்த வழக்கில், பிரகாஷின் மகள் கிருத்திக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்தில், கிருத்திக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கொலை நடந்த போது, அதேக் கட்டடத்தின் வேறொரு தளத்தில் அவர் இருந்துள்ளார். கொலை நடந்த பிறகே அவர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுளள்து.
சம்பவம் நடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பல்லவிக்கும் ஓம் பிரகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பல்லவி, மிளகாய் பொடியை பிரகாஷ் மீது தூவி குருடாக்கிவிட்டு, கத்தியால் குத்தியிருக்கிறார். அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில், மிக ஆழமான கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும் உடல் கூராய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓம் பிரகாஷின் சொத்துகள் தொடர்பாகவே இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வந்ததாகவும், கொலைக்கு வேறொந்த பின்னணியும் இல்லை என்பதும் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொலை நடந்தது எப்போது?
கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரில் உள்ள வீட்டில் ஓம் பிரகாஷ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி பல்லவி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல் துறை மூத்த அதிகாரிகள் விரைந்து சென்றனா்.
அப்போது படுகாயங்களுடன் வீட்டின் தரைத்தளத்தில் ஓம் பிரகாஷ் உயிரிழந்து கிடந்ததாக காவல் துறை கூடுதல் ஆணையா் விகாஷ் குமாா் விகாஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஓம் பிரகாஷை ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதற்கான அடையாளங்கள் உள்ளன. உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.