தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

பாஜவை தமிழகம் முழுவதும் வளர்க்க கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதைப் பற்றி...
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுடன் பிரதமர் நரேந்திர மோடி.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுடன் பிரதமர் நரேந்திர மோடி.
Published on
Updated on
1 min read

பாஜவை தமிழகம் முழுவதும் வளர்க்க கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(ஆக.15) மாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். நாட்டின் சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

la. Ganesan worked hard to expand the BJP across Tamil Nadu pm modi condoles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com