
இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டின் சுதந்திர தினத்தில், புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய மக்களால் தயாரிக்கப்பட்ட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் சந்தைக்கு வரும் என்று மோடி கூறினார்.
செல்போன் முதல் கணினி வரை, வீட்டு உபயோகப் பொருள் முதல், மின்னணு வாகனங்கள் வரை எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும், அதன் அடிப்படைத் தேவையாக இருப்பது செமிகண்டக்டர்கள்தான்.
நாட்டில் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, ஆனால் அது கோப்புகளிலேயே சிக்கிக் கொண்டது, அதே நேரத்தில் பல நாடுகள் அதில் தேர்ச்சி பெற்று உலகை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. செமிகண்டக்டர் உற்பத்தி என்பது 50-60 ஆண்டுகளுக்கு முன்பே கருக்கொலை செய்யப்பட்டுவிட்டது. அதனால் நாம் 50-60 ஆண்டுகளை இழந்துவிட்டோம்.
நமக்குப் பிறகு, செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்த பல நாடுகள், இன்று தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று தங்கள் சக்தியை வெளி உலகுக்கு நிரூபித்துவிட்டன. எந்தவொரு முன்னாள் அரசையும் விமர்சிக்க நான் செங்கோட்டையில் இல்லை, ஆனால் இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று பிரதமர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.