பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர நாள் வாழ்த்து...
காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், மழையில் நனைந்தபடி பங்கேற்ற ராகுல் காந்தி.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், மழையில் நனைந்தபடி பங்கேற்ற ராகுல் காந்தி.PTI
Published on
Updated on
1 min read

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,

“நாட்டு மக்கள் அனைவருக்கு இதயப்பூர்வமான சுதந்திர நாள் வாழ்த்துகள். தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

உண்மை மற்றும் சமத்துவத்தின் அடித்தளத்தில் நீதி தங்கியிருக்கும் ஒரு இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாடாக சுதந்திர நாள் இருக்கிறது. ஒவ்வொருவரின் இதயமும் சகோதரத்துவம் மற்றும் மரியாதையால் நிறைந்திருக்கிறது.

ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பங்கேற்காமல் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புறக்கணித்திருந்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் அலுவலகத்தில் கொட்டும் மழையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றிய நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Summary

Rahul Gandhi wishes the nation on Independence Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com