தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
இதனிடையே, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து இன்று காலை உரையாற்றினார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
கடந்தாண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது, செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.