
உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சரூர்பூர் நகருக்குட்பட்ட பூனி சுங்கச் சாவடியில், ஊழியர்கள் சிலர் இளைஞர் ஒருவரை கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விடியோ காவல் துறையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சுங்கச் சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்குவது 26 வயதான ராணுவ வீரர் (கபில் சிங்) எனத் தெரியவந்துள்ளது.
கன்வார் யாத்திரைக்காக விடுமுறையில் தனது சொந்த ஊரான கோத்கா கிராமத்திற்கு வந்த கபில் சிங், விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் செல்வதற்காக விமானத்தைப் பிடிக்க சுங்கச் சாவடியைக் கடந்துள்ளார்.
அங்கு சுங்கச் சாவடி ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அங்கிருந்த ஊழியர்கள் சேர்ந்து கபில் சிங்கை கம்பத்தில் கட்டி வைத்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விடியோவின் மூலம் இதுவரை 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க | மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.