நபார்டு நிதி: மத்திய அமைச்சருடன் தங்கம் தென்னரசு சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியது பற்றி...
Minister thangam thennarasu meeting with Nirmala Sitharaman
நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு. உடன் கனிமொழிX
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

நிகழ் நிதியாண்டுக்கான நபார்டு வங்கியின் நிதியை விடுவிக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

அப்போது நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி உடன் இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், 2025-26 நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியை வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Summary

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu met Union Finance Minister Nirmala Sitharaman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com