முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் புதன்கிழமை காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிகாரில் வாக்குரிமைப் பேரணி நடத்தி வரும் நிலையில், இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.