ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்பு

கச்சா எண்ணெய் மீது தள்ளுபடி! அமெரிக்கா வேண்டாம்; ரஷியா இருக்கு! இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது ரஷியா தள்ளுபடி அறிவித்துள்ளது.

Published On :

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது ரஷியா தள்ளுபடி அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவிகித கூடுதல் வரியை விதித்தது. இந்தியா மீதான அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு, உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியது.

இந்த நிலையில், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது 5 சதவிகிதம் தள்ளுபடி செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ரஷியா கூறுகையில், இந்தியாவுக்கு இது ஒரு சவாலான நிலை என்றபோதிலும், நமது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும், இந்தியா - ரஷியா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று நம்புகிறோம்.

அரசியல் நிலைமை இருந்தபோதிலும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட அதேஅளவில்தான் இருக்கிறது. தள்ளுபடியைப் பொறுத்தவரை, இது ஒரு வணிக ரகசியம் என்று தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, இந்திய பொருள்களை அமெரிக்க சந்தைக்குக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏதேனும் இருந்தால், இந்திய பொருள்களுக்காக ரஷியாவின் சந்தை எப்போதும் திறந்திருக்கும் என்றும் தெரிவித்தனர்.

Summary

Russia Offers 5% Discount On Oil To India Amid Trump Tariff Tensions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.