
மும்பையில் சொகுசு ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம், வோர்லியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு ஆங்கிலத்தில் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் ஒன்று புதன்கிழமை இரவு வந்தது. அதில், 3 அறைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
அதோடு தமிழ்நாட்டில் ஒரு காவல் சங்கம் அமைக்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹோட்டலில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் படையினர் உடனே முழுமையான சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஹோட்டலுக்குள் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்காணிக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர். நகரத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சமீபத்தில் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன.
இந்த மின்னஞ்சல்களில் சில அனுப்புநரின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தை மறைக்க மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பப்பட்டதாக அதிகாரி கூறினார். மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.