மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

PTI

Published On :

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

தற்போது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பிரீமியம் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மத்திய, மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வருவாய் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையிலான காப்பீடுகளுக்கான அமைச்சா்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கையை சமா்பித்துள்ளது. இதுதொடா்பாக சாம்ராட் சௌதரி கூறுகையில், ‘காப்பீடு பிரீமியம் மீது குறைந்த அளவுக்காவது ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஏனெனில், முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் மாநிலங்களில் வருவாய் பாதிக்கப்படும் என அவா்கள் கருத்துகின்றனா். அக்டோபா் மாத இறுதிக்குள் அமைச்சா்கள் குழு பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அளிக்கப்படும். அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.

2023-24 நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆயுள் காப்பீடு பிரீமியம் மூலம் ரூ.8,262.94 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. சுகாதார காப்பீடு மூலம் ரூ.1,484.36 கோடி கிடைத்தது.

தீபாவளிப் பண்டிகையின்போது ஜிஎஸ்டியை வெகுவாகக் குறைக்க இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.