
மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் இருந்து 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கும் எல்டிடி-க்கும் இடையே தினமும் குஷிநகர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலின் குளிர்சாதனப் பெட்டி கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் நான்கு வயது சிறுவனின் உடல் சனிக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், துப்புரவுப் பணியின் போது காலை 6 மணியளவில் எக்ஸ்பிரஸின் பி2 பெட்டியின் கழிப்பறைகளில் ஒன்றில் சிறுவனின் உடலை துப்புரவு ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை உடனடியாக அரசு ரயில்வே காவல்துறையை தொடர்பு கொண்டு உடல் மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து அரசு ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உடல் மீட்கப்பட்ட பிறகு ரயில்வே பாதுகாப்புப் படை புகார் அளித்துள்ளது என்றார். மும்பையிலிருந்து வட இந்தியாவை இணைக்கும் பிரபலமான ரயில்களில் குஷிநகர் எக்ஸ்பிரஸ் ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.