
ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் நியூ மார்க்கெட் சௌக் அருகே பேருந்தில் இருந்து காரில் மாற்றப்பட்டபோது மூன்று அட்டைப்பெட்டிகளில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் ஒரு அட்டைப்பெட்டியைத் திறந்தபோது, 42 மூட்டைகளில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இந்த 42 மூட்டைகள் இரண்டு தனித்தனி பொட்டலங்களில் சுற்றப்பட்டிருந்தன.
இதுகுறித்து சுக்தியோ நகர் காவல் நிலைய பொறுப்பாளர் கிருஷ்ண குமார் சாஹு கூறுகையில், மூன்று அட்டைப்பெட்டிகளில் உள்ள போலி ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம்.
ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்ததும் சரியான எண்ணிக்கை தெரியவரும்.
பிகாரில் உள்ள பாட்னாவிலிருந்து இந்த சரக்கு வந்ததுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ராஞ்சியைச் சேர்ந்த எம்.டி. சபீர் என்ற ராஜா (27) மற்றும் சாஹில் குமார் என்ற கரண் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் ராஞ்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.