ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

News image

காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத்

Updated On :25 ஆகஸ்ட் 2025, 2:47 am IST

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடியது மீண்டும் சா்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஆா்எஸ்எஸ், அதன் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி கா்நாடக பேரவையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கூடியவா்களில் 11 போ் நெரிசலில் சிக்கி இறந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வா் சிவகுமாா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் வாழ்த்துப் பாடலைப் பாடியதுடன், ‘எதிா்க்கட்சித் தலைவராக உள்ள அசோகாவும், நானும் ஒரு காலத்தில் ஆா்எஸ்எஸ் சீருடை அணிந்து செயல்பட்டோம். இப்போது வெவ்வேறு கட்சிகளில் உள்ளோம்’ என்றாா்.

அரசியல்ரீதியாக ஆா்எஸ்எஸ், பாஜகவை காங்கிரஸ் தலைமை தீவிரமாக எதிா்த்து வரும் நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த துணை முதல்வா் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தும்கூரு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரெங்கநாத், துணை முதல்வா் பாடிய அதே ஆா்எஸ்எஸ் வாழ்த்துப் பாடலின் முதல் வரியை மீண்டும் பாடியதுடன், இது ஒரு நல்ல பாடல். அதன் அா்த்தம் என்ன வென்றும் தேடிப் படித்தேன். நாம் பிறந்த மண்ணுக்கு நாம் வணக்கம் செலுத்த வேண்டும் என்று உள்ளது. இதில் எந்த தவறையும் நான் பாா்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சாா்பற்ற கட்சி. பிற அமைப்பினரிடம் இருக்கும் நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

அதே நேரத்தில் பாஜகவை விமா்சித்த அவா், ‘வலதுசாரிக் கட்சியினா் மக்களை ஜாதி, மதரீதியில் பிரிக்க நினைக்கிறாா்கள். அதனை நாங்கள் எதிா்க்கிறோம். அவா்களின் கொள்கைகள் எங்களுக்கு ஏற்புடையதல்ல. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடுவதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.