ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

News image
பிகாரில் ராகுல் காந்தி.
Updated On :24 ஆகஸ்ட் 2025, 7:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டின் ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கான அனைத்து வேலைவாய்ப்பு வாய்ப்புகளையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மூடிவிட்டன.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிய நரேந்திர மோடி அரசு, இப்போது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஏழைகளின் வாக்குகளைத் திருட விரும்புகிறது.

பிகாரில் இது நடக்க இந்தியா கூட்டணி அனுமதிக்காது. அரசியலமைப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது.

பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

summary

Congress leader Rahul Gandhi on Sunday accused the NDA government of trying to steal votes in the name of the special intensive revision (SIR) of electoral rolls in Bihar, ahead of the assembly polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.