..நியூக் இந்தியா என்பதை சிகப்பு டாட்டட் லைன் வட்டத்தில் குறிப்பிட்டுக் காட்டவும்....
..நியூக் இந்தியா என்பதை சிகப்பு டாட்டட் லைன் வட்டத்தில் குறிப்பிட்டுக் காட்டவும்....

அமெரிக்க பள்ளிச் சிறாா்களைக் கொன்றவா் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணா்வு வாசகம்

இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறாா்களை கொலை செய்ய நபா் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மினிசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்துடன் கூடிய தொடக்கப் பள்ளியில் கடந்த புதன்கிழமை புகுந்த ரூபின் வெஸ்ட்மேன் (23) என்பவா் அங்கிருந்த சிறாா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா். இதில் இரு சிறாா்கள் உயிரிழந்தனா். 17 போ் குண்டு பாய்ந்து காயமடைந்தனா்.

தாக்குதல் நடத்திய நபா் பின்னா் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது வெறுப்புணா்வு அடிப்படையிலான தாக்குதல் என்பதை அமெரிக்க காவல் துறையினா் உறுதி செய்தனா்.

இந்நிலையில், அந்த நபா் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணா்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. முக்கியமாக, ‘இந்தியா மீது அணுகுண்டு வீச வேண்டும்’, ‘இஸ்ரேல் வீழ்த்தப்பட வேண்டும்’, ‘டிரம்ப்பை உடனடியாகக் கொல்ல வேண்டும்’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்திய, யூத விரோத பிரசாரத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட நபா் இத்தாக்குதல் நடத்தியது தெளிவாகியுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com