
பெண்களின் பாதுகாப்புக் குறித்த நாரி 2025 என்ற ஆய்வு முடிவு, புகார் அளிக்க முடியாத, எண்ணற்ற துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாவதாகவும், அது பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தரவுகளைவிட, நாட்டின் கிராமப் பகுதியில் வாழும் 40 சதவீத பெண்கள் தங்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக பெண்களின் பாதுகாப்பு நாரி 2025 என்ற தேசிய ஆண்டறிக்கைக் குறையீடு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 31 நகரங்களில் இருந்து சுமார் 13 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை இது விவரிக்கிறது.
ஆய்வில் பங்கேற்ற 7 சதவீத பெண்கள், 2024ஆம் ஆண்டு பல்வேறு துன்புறுத்தல்களை சந்தித்ததாகவும், 18 - 24 வயதுடைய பெண்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவான தேசிய குற்ற ஆவணப் பதிவு வெளியிட்ட, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கையைவிட 100 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
இதில் துன்புறுத்தல் என்பது சாலையில் அல்லது பொதுப் போக்குவரத்தில் செல்லும்போது, வார்த்தையால் கேலி செய்வது, தொடுவது, இடிப்பது போன்ற துன்புறுத்தல்களைக் குறிக்கிறது. தேவையான அளவில் போக்குவரத்து வசதி இல்லாதது, தெருக்களில் விளக்குகள் எரியாதது, மோசமான உள்கட்டமைப்புகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே கொல்கத்தா மற்றும் தில்லிதான், பெண்களின் பாதுகாப்பில் மிக மோசமாக இருப்பதாகவும், மும்பை, கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம் உள்ளிட்ட நகரங்கள் சுமார் பிரிவில் இருக்கின்றன.
அதாவது, புகார் அளிக்கப்படாத, புகார் அளிக்கவே முடியாத ஆனால், பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் துன்புறத்தல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.