சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி? ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்!

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி என்பது குறித்துரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்..

News image

செய்யறிவு

Updated On :29 ஆகஸ்ட் 2025, 1:34 pm IST

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி என்பது குறித்து ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மெட்டா நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் பொறியாளராகப் பணியாற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க இளைஞர் மனோஜ் துமு. இவர் செய்யறிவுத் துறைக்குள் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

தன்னுடைய தொழில் வாழ்க்கைப் பயணம் குறித்து விவரித்து, செய்யறிவுத் துறைக்குள் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கும், வேலைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் அவர் அனுபவப்பூர்வமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

இவர் தற்போது மெட்டாவின் விளம்பர ஆராய்ச்சிக் குழுவில் பணியாற்றி வருகிறார், அமேசானில் ஆண்டுக்கு ரூ.3.36 கோடி சம்பளத்தில் வந்த வேலையை உதறிவிட்டு மெட்டா நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

நேர்காணல் போட்டிகளுக்கு இடையே, தன்னுடைய வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தான் வடிவமைத்துக் கொண்டேன் என்பது குறித்து அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆங்கில ஊடகத்தில் அந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் மெஷின் லேர்னிங் வேகமாக மாறி வருகிறது. சாட்ஜிபிடி போன்ற புதிய வரவுகளால், மெஷின் லேர்னிங் பொறியாளர், அப்ளைடு சயின்ஸ், ஆராய்ச்சி அறிவியளலார் போன்ற புதிய துறைகளும் வளர்க்கிறது.

தற்போது, மெட்டா நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தான் பணியாற்றுவதாகவும், செய்யறிவு துறையில், மெட்டா நிறுவனம் எப்போதும் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதே தன்னுடைய பணி என்றும் கூறியுள்ளார்.

தனிப்பட்ட புராஜெக்டுகளை விடவும், தொழில் அனுபவம்தான் முக்கியம். கல்லூரிகளிலேயே இன்டர்ன்ஷிப்புகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், புராஜெக்டுகள் முக்கியம்தான், ஆனால், அது இன்டர்ன்ஷிப்புக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கும். ஒரே நேரத்தில் அமேசான் மற்றும் மெட்டாவில் விண்ணப்பித்தபோது, புராஜெக்டுகளை முற்றிலும் நீக்கிவிட்டு, பணி அனுபவங்களை மட்டுமே ரெஸ்யூமேவில் பதிவிட்டேன்.

எந்த விளம்பரத்தையும் பார்த்து விண்ணப்பிக்காமல், நேரடியாக கம்பெனியின் இணையதளத்தில் இருந்த முகவரிக்கு லிங்க்டுஇன் மூலம் எனது மிகச் சிறப்பான ரெஸ்யூமேவை அனுப்பியிருந்தேன்.

அதுபோல, நேர்காணலுக்கும், நிறுவனத்தின் அடிப்படை முதல் அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டுதான் செல்ல வேண்டும். மெட்டா நிறுவனத்தில் நேர்காணல் மட்டுமல்லாமல் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேல், கோடிங், மெஷின் லேர்னிங், பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டது.

கல்லூரியில் படிக்கும்போது, இன்டர்ன்ஷிப்பை தான் தவறவிட்டுவிட்டதாகவும், பிறகு அதன் முக்கியத்துவம் தெரிந்து, படிப்பு முடிந்ததும், ஒப்பந்தப் பணி ஒன்றில் சேர்ந்து பணியாற்றியதாகவும் கூறுகிறார்.

மெஷின் லேர்னிங் மற்றும் பழமையான மென்பொருள் பொறியாளர் பணியில், எப்போதும் இளைஞர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலைக்குச் செல்லுங்கள். அங்குதான், உங்கள் விருப்பத்தை அறிந்து வேலை செய்ய முடியும். நல்ல வாய்ப்புகள் வரும் அதனை தவறவிட்டுவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.