டோக்கியோ சென்ற பிரதமர் நரேந்திர மோடியை காயத்ரி மந்திரம் பாடி ஜப்பானிய பெண்கள் வரவேற்றனர்.
15-ஆவது இந்தியா - ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை டோக்கியோ நகருக்குச் சென்றடைந்தார்.
டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜப்பான் வாழ் இந்தியர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார்.
இதனிடையே, ஜப்பானைச் சேர்ந்தவர்கள் இந்திய பாரம்பரிய உடைகள் அணிந்து பரதநாட்டியம், கதக் உள்ளிட்ட நடனங்களையும் பாடல்களையும் பாடி மோடியை வரவேற்றனர்.
மேலும், ஜப்பானைச் சேர்ந்த பெண்கள் காயத்ரி மந்திரத்தை பாடியும் மோடியை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் கதக் நடனமாடிய ஜப்பானிய பெண் கூறுகையில், “நாங்கள் கதக், பரதநாட்டியம், மோகினியாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினோம். நான் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக சந்திக்கிறேம். ஆனால், இந்த முறைதான் அவரை மிக அருகில் பார்த்தேன். இது எங்களுக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா-ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.