உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.
நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆக.5-ஆம் தேதி மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.
இதில் 4 போ் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 69 போ் மாயமாகினா். 1,200-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.
இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.
சமோலி மாவட்டத்தில் 25 கால்நடைகள் மாயமானதாகவும் அந்த மாநில பேரிடா் மீட்புப் படை தெரிவித்தது.பல்வேறு கிராமங்கள் நீரால் சூழப்பட்டு வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு; 79 போ் காயம்

உ.பி.யில் பலத்த மழை, சூறாவளி: 33 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



