
உதய்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ தீப்தி கிரண் மகேஸ்வரி. இவரும், அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சனிக்கிழமை உதய்பூர்-ராஜ்சமந்த் நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
உதய்பூரில் உள்ள அம்பேரி அருகே அதிகாலை 1 மணியளவில், மகேஸ்வரியின் கார் மீது குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மகேஸ்வரியின் விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது உதவியாளர் ஜெய் மற்றும் ஓட்டுநர் தர்மேந்திரா ஆகியோரும் காயமடைந்தனர்.
அனைவரும் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் பயணித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.