
உத்தரப் பிரதேசத்தில் மது அருந்திய 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லிகாய் தத் நகர் கிராமத்தில் மது அருந்திய மூன்று பேர்களில் இருவர் பலியாகினர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஹரியாணாவிலிருந்து தாஸின் மருமகன் கொண்டு வந்த மதுவை 3 பேர் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில், அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. குடும்ப உறுப்பினர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ராம்பீர் மற்றும் சூரஜ்பால் வழியிலேயே பலியாகினர். தாஸ் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பலியானவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பிறகு இறப்புக்கான சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்றும் வட்ட அதிகாரி நிதின் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.