போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் - பிடிஐ

Published On :

இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை (ஆக. 30) மாலை சென்றார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைஒத் தொடர்ந்து தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முன்னதாக, மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் கைக்குலுக்கி வரவேற்றார்.

உலக அளவில் ஏற்பட்டுவரும் நெருக்கடி மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா - சீனா இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்.

''மாற்றத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''சிறந்த அண்டை நாடுகளாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

இத்துடன், கடந்த ஆண்டு ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்ற வெற்றிகரமான மாநாட்டில் பங்கேற்றது குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், இந்தியா - சீனா இடையிலான ராஜதந்திர உறவின் 75வது ஆண்டின் நிறைவையும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட கால கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச்செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

Summary

Vital to be friends, good neighbours: Xi tells PM Modi at SCO Summit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.