
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை பாராட்டிப் பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெற்றிகரமாக நடத்தும் சீன அதிபர் ஜின் பிங்குக்கு பாராட்டுகள்.
பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேம்படுத்தி, முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளோம். 280 கோடி மக்களின் நலன், நமது இருதரப்பு ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
எல்லையில் படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லையில் மேலாண்மை குறித்து நமது பிரதிநிதிகளுக்கு இடையே சிறப்பான ஒப்புதல் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் கலந்து கொள்வதால், அமெரிக்காவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.