இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு?

இந்தியாவில் செயல்படும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டால், அந்நாட்டுக்குத்தான் பேரிழப்பு
இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு?
Published on
Updated on
1 min read

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியா மீதான வரிவிதிப்பால், இந்தியாவில் செயல்படும் அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

145 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது, அந்நாட்டில் பெரும் இழப்புகளையும் கடும் சவால்களையும் ஏற்படுத்தும்.

மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்ஸை இயக்கும் வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 2,390 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டைவிட 5 சதவிகிதம் அதிகமாகும்.

இதனிடையே, இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய் 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. பெப்சிகோவின் உலகளாவிய முதல் 15 சந்தைகளில் உள்ள இந்தியாவில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் ரூ. 3,500 முதல் 4,000 கோடி முதலீடு செய்துள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும்நிலையில், இந்தியாவிலும் அவற்றை புறக்கணித்தல் என்பது அமெரிக்காவுக்குத்தான் பேரிழப்பாக அமையும்.

இந்தியா மீது பரஸ்பர வரியாக 50 சதவிகிதம் விதித்த அமெரிக்கா, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து மேலும் 50 சதவிகித வரியையும் அறிவித்தது.

இந்த வரிவிதிப்பையடுத்து, சுதேசி கொள்கை மீது மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில்,

இந்தியாவை உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற விரும்பும் எந்தவொரு நபரோ அரசியல் கட்சியோ நாட்டின் நலனுக்காகத்தான் பேச வேண்டும். சுதேசி கொள்கையை மக்கள் மனங்களில் ஏற்படுத்த வேண்டும்.

இந்தியன் வியர்வை சிந்தி தயாரித்த பொருள்களை நாம் வாங்கப் போகிறோம். இந்திய மக்களின் திறமையால், வியர்வையால் எதைச் செய்தாலும், அதுதான் சுதேசி என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், உலகில் பொருளாதார சுயநல அரசியல் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில்தான் மும்முரமாக உள்ளனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை மறைமுகமாக விமர்சித்தார்.

இதையும் படிக்க: தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

Summary

'No Pepsi, Coca-Cola, McDonald's': After Trump's 50% tariffs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com