வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்திருப்பது பற்றி...
WhatsApp apk link scams on the rise
வாட்ஸ்ஆப்
Updated on
1 min read

வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற மெசஞ்சர் செயலிகளைப் பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாடு முழுவதும் வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்னாப் சாட் போன்ற மெசஞ்சர் செயலிகளை 60 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து, முதல்முறையாக உள்நுழைவதற்கு மட்டும் பதிவிடும் தொலைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி இருந்தால் போதும், பின்னர் சிம் கார்டு இல்லையென்றாலும் செயலிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.

இணைய வசதி இருந்தால், சிம் கார்டு இல்லையென்றாலும் இந்த செயலிகளை உபயோகித்துக் கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி சமீபகாலமாக இணையக் குற்றங்கள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. சிம் கார்டு இல்லாமல், இணைய வசதியுடன் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை செயலிகளைப் போன்று வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல் போன்ற அனைத்து மெசஞ்சர் செயலிகளும் செல்போனில் சிம் கார்டு இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

செல்போனில் இருந்து சிம் கார்டை வெளியே எடுத்தாலோ அல்லது சிம் கார்டு செயலிழந்தாலோ வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் செயலிழந்துவிடும்.

அதேபோல், கணினி மற்றும் மடிக்கணினிகளில் வாட்ஸ்ஆப் வெப் போன்றவற்றை ஒருமுறை க்யூஆர் கோடு அல்லது ஓடிபி மூலம் உள்நுழைந்தால் 6 மணிநேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். பின்னர், தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும். மீண்டும் உள்நுழையும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாட்டை 90 நாள்களுக்குள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

Summary

Central government controls WhatsApp and Telegram apps!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com